அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர், காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக் காலால் நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கி இருக்கிறது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும் வெள்ளை இன மக்களுக்கும் இடையே இனவெறி சண்டை எழுந்து வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற 12 years of Slave உள்ளிட்ட பல படங்களில் வெள்ளையர்களின் ஆதிக்க வெறியை படம் பிடித்து காட்டியிருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி போலீசால் கள்ளநோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது கறுப்பின இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போலீசார் காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கிறார்கள். விடாமல் 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தி உள்ளார். இதில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த மரணம் காரணமாக தற்போது அமெரிக்காவில் மினியாபோலிஸ் பகுதி இருக்கும் மின்னசோட்டா மாகாணம் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு அனைத்து தெருக்களிலும் கருப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

முக்கியமாக மின்னெபோலிஸ் பகுதியில் இருக்கும் போலீஸ் நிலையம் உட்பட பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை இனியும் பொறுத்துக்க கொள்ள முடியாது என்று மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

நிறவெறியால் இப்படியொரு இழிவான செயலை போலீஸ் அதிகாரிகளே செய்துள்ள நிலையில், ஜார்ஜ் கடைசியாக சொன்ன மூச்சு விட முடியல ‘I can’t breathe’ என்ற வார்த்தையை பல பிரபலங்களும் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த போலீஸ் அதிகாரிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு அங்கு வெள்ளையின மக்கள், பிற சிறுபான்மையினர்கள் ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் அங்கு போராடும் மக்களை அதிபர் ட்ரம்ப் குற்றவாளிகள், ரவுடிகள் என்று கூறியுள்ளார். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இவர்களை போலீசார் அடக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக அங்கு அனுப்பப்பட்ட தேசிய படை அங்கு சரமாரியாக கருப்பின இளைஞர்களை கைது செய்து வருகிறது.

இதனால் ட்ரம்பிற்கு எதிராக மக்கள் மொத்தமாக களமிறங்கியுள்ளனர். தற்போது இந்த செயலில் ஈடுப்பட்டதாக 4 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

[su_carousel source=”media: 14288,14287″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]

மேலும் வாசிக்க: டிரம்ப் ஆதாரமற்ற தகவல்களை பதிவிட்டதாக ட்விட்டர் குற்றச்சாட்டு- டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு