நலிவடைந்த ஏழைகளுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.2,000 வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 11ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கஜா புயலால் தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்படாத நிலையில் தேர்தலை மனதில் வைத்தே ஆளும் அரசு அனைத்த வறுமை கோட்டினருக்கும் சிறப்பு நிதி அளிக்க முடிவு செய்திருப்பதாக சாடி வழக்கு தொடரப்பட்டது. நலிவடைந்த குடும்பத்தினருக்கு ரூ.2,000 வழங்குவதை எதிர்த்து விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்குகாக தொடர்ந்தார் .
மேலும் எதை வைத்து 60 லட்சம் ஏழைகள் ( வறுமை கோட்டுக்கு கீழே ) என்று தீர்மானிக்க பட்டது என்ற கேள்விக்கும் தமிழக அரசு பதில் தர முடியாமல் திண்டாடியதும் குறிப்பிடதக்கது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரூ.2,000 வழங்கும் சிறப்பு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பல்டி அடித்துள்ளது . ஆனால் தேர்தல் முன்பே இந்த திட்டம் அறிவிக்க பட்டதால் இது தேர்தல் விதிக்கு பொறுந்தது என்றும்., மேலும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் அறிவித்த காரணத்தினால் தான் நிதிபற்றாகுறை எற்பட்டுள்ளதே உண்மை என பெயர் தெரிவிக்க விரும்பா உயர் அரசு அதிகாரி தெரிவித்தார்