இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலக அளவில் வலைதளத்தில் முதன்மையான நிறுவனம் கூகுள். அந்நிறுவனம் யூட்டியூப், ஜிமெயில், ஜிபே, கூகுள் மேப் உள்பட பல்வேறு செயலிகளை பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது.
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தினமும் செல்போன் மூலமாகவும், கணிணி மூலமாகவும் கூகுள் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் செல்போனில் கூகுள் செயலிகள் அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதனால், பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் #googledown, #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது குறைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், கூகுள் நிறுவனம் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. இதனையடுத்து சில நிமிடங்களுக்கு பின்னர் கூகுள் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.