தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) 5,795 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 1,20,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றில் இருந்து மேலும் 6,384 பேர் குணமடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,96,171 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 53,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 68.99% ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் அரசு நடவடிக்கை எடுக்கும்; நீதிமன்றம் அல்ல