இந்திய மக்கள் மீது வரி மீது வரி விதித்து உலகத்திலேயே அதிக விலைக்கு பெட்ரோலை விற்று.. சாமானிய இந்தியர்களை சுரண்டி தின்று, அனைத்து பொது நிறுவனங்களையும் விற்று ஏப்பம் விட்டு..

ஆசியாவிலே இரு பெரிய பணக்காரர்களாக குஜராத்திகள் அம்பானி மற்றும் அதானியை கடும் கொரானா காலத்திலும் ஆக்கி விட்டு.. பங்கு வர்த்தனை தவிர மற்ற அத்தனை துறைகளிலும் பொருளாதாரம் வீழ்ச்சியை காண..

பொது ஜனங்களின் வாங்கும் திறன் குறைந்து காணப்பட.. மகிழ்ச்சியுடன் ஜாலியாக பாஜக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில்… முப்புறமும் அந்நிய நாட்டு எதிரிகள் சீனா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நம்மை சூழ..

article370 நீக்கிய பின்னும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் முழங்கிய பின்னரும்.. ஓடின ஆண்டுகள் இரண்டு தான்..

ஒன்றரை வருடமாக காஷ்மீரில் பாதுகாப்பு காரணம் என்று கூறி இன்டர்நெட் கட் செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கிகளின் சத்தம் தொடர்ந்து கேட்கின்றது காஷ்மீரில்..

Article370 நீக்கிய பின் ஷூட்டிங் நடத்தலாம் இனிமேல் காஷ்மீரில் என்று பெருமை பொங்க ஒன்றிய அரசின் பிரதமர் மோடி பொங்கலும் வைத்தார். ஆனால் இப்போதோ நடப்பது சூட்டிங் மட்டுமே தினம் தினம் ரத்தம் தோய்ந்த செய்திகள் மட்டுமே ஈட்டிகள் ஆக நம் நெஞ்சில் பாய..

இயற்கை மிகு நம் காஷ்மீரை, செவ்வாழை தோட்டத்து அழகு பூமியை, அதில் குதித்தாடும் குரங்குகளாக ஆகி பாஜகவினர் சர்வ நாசம் பண்ணி விட்டார்கள் இரண்டு ஆண்டுகளில்.. முக்கியமாக காஷ்மீரை வணிக ரீதியாகவும், காஷ்மீர் மக்களை வாழ்வியல் ரீதியாகவும்..

14 கிராம் போதை வஸ்து வைத்திருந்த மும்பையை சேர்ந்த கான் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில்.. 3000 கிலோ போதை வஸ்துக்கள் வைத்திருந்த குஜராத்தி அதானி மீதும் அவர் கட்டுப்பாட்டில் இருந்த முந்த்ரா துறைமுகம் மேல் ஒரு சின்ன கீறல் கூட இல்லை என்பதே உண்மை..

ஆக முஸ்லிம்களுக்கு இந்தியாவில் ஒரு நீதி.. குஜராத்திகளுக்கு ஒரு நீதியா என்ற கூக்குரல் வட இந்திய தெருக்களில் இப்போது தெளிவாக கேட்கப்படுகிறது என்றால் அதற்கு யார் காரணம்.. சிந்திப்பவர்கள் அருள்கூர்ந்து சிந்திக்க..

வேறுவழியில்லாமல் உச்ச நீதிமன்ற உத்தரவினால் சிறையில் அடைக்கப்பட்ட உள்துறை ஒன்றிய அமைச்சர் மகனுக்கு.. 5 ஸ்டார் விருந்தும் தருகிறார்கள் உத்தரப்பிரதேச பாஜக ஆளும் அரசு..

உள்ளூரிலும் பிரச்சனை.. இந்தியாவை சுற்றி பார்டர் முழுவதும் சூழ்ந்து விட்டதே கவலைத் தரக்கூடிய பிரச்சனை.. சமாளிக்க இயலாத வக்கற்ற பாஜக அரசு ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவை காப்பாற்றட்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. . 🐝

https://www.facebook.com/savenra/posts/7156831371009391