கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ்பெற்றனர்.
 
224 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்திலே எம்.எல்.ஏக்கள் விவரம் பின் வருமாறு:
பாஜக :104
காங்கிரஸ் :80
ஜனதாதள் :37
பிஎஸ்பி :1
சுயச்சை:2
 
தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் ஜனதாதள் உடன் கூட்டணி சேர்ந்து இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைபற்றியது .
 
இந்த நிலையில்  குமாரசாமி தலைமையில் உள்ள கூட்டணி அரசை மாற்றவேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் வாபஸ் பெற்றனர்.
 
ஏற்கனவே கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல், எம்.எல்.ஏக்களை விலை பேசுதல் என்ற குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது, அரசியல் பரபரப்பை பங்கு ஏற்படுத்தியுள்ளது. 2 சுயேட்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆளும் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 117 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் தேவையான் மஜாரிட்டி 113 க்கு மேல காங்கிரஸ் ஜனதாதள் கூட்டணி 4 எம்.எல்.ஏக்கள் வைத்து இருப்பதால் ஆட்சிக்கு ஒன்றும் தற்போது அபத்து இல்லை என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்
 
மேலும் கூட்டணி கட்சிகளிடையே புரிதல் இல்லாததால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக எம்எல்ஏ ஹெச்.நாகேஷ் பேட்டி அளித்தார்.
 
மேலும் கூட்டணியை விட நிலைத்த அரசால் தான் சிறப்பான முறையில் செயலாற்ற முடியும் என கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்எல்ஏ ஹெச்.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக பெரும்பான்மை இல்லாத பட்சத்திலும் கூட கோவா மாநிலத்தில் குதிரை பேரத்தில் ஈடுப்பட்ட பாஜக சமீபத்தில் நடந்த ஐந்து சட்டமன்ற தேர்தலில் 5-0 என படுதோல்வி சந்தித்து என்பது கூறிப்பிடதக்கது
 
இப்போது மீண்டும் பாஜக குதிரைபேரத்தை கையில் எடுத்துள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்