சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவைத் திறக்க தடை விதித்து, சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சமீபத்தில் தமிழக அரசால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரை காமரதாஜர் சாலையில், பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் பிரமாண்டமான நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதனையடுத்து சுமார் ரூ. 2.52 கோடி அளவில் விளைவினை அமைக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன  

அ\\\தே சமயம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, காமராஜர் சிலையில் மைனத்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை மேற்கோள் காட்டி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்குப் பதிலளித்திருந்த தமிழக அரசின் மனுவில் காமராஜர் சாலையானது தற்போது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான முந்தைய வழக்கின் தீர்ப்பானது இதற்கு பொருந்தாது என்று பதிலளித்திருந்தது. 

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவைத் திறக்க தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கானது திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட சாலையானது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஆக்கிரமிப்பு என்பது ஆக்கிரமிப்புதான் என்று கூறிய நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் ஆனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவைத் திறக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது. 

அதேசமயம் நடைபாதையில் வசிப்போர் வாழ்நிலையை மேபடுத்த செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கையில், இத்தகைய விஷயங்களுக்காக இத்தனை தொகையை செலவு செய்வது சரியா என்றும்  நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கினை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.