இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 தமிழர்கள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் கடினமாகி உள்ளது.
குறிப்பாக மூணாறில் இருக்கும் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளை மண் மூடியது. இவை அனைத்தும் தமிழர்கள் வசிக்கும் வீடுகள்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்கள் 90% பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அங்கு தேயிலை தோட்ட தொழிலார்களாக இருக்கிறார்கள். வீடுகளை மொத்தமாக மணல் மூடியதில் 80 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலச்சரிவில் இதுவரை 30 தமிழர்கள் பலியாகி உள்ளனர். இன்று அதிகாலை மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வாசிக்க: மூணாறு நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி; 80 பேர் மாயம்… தொடரும் ரெட் அலர்ட்