இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் தென்மேற்குப் பருவமழை நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா,கோவா மாநிலங்களில் பருவமழையின் தீவிரத்தினால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த 3 தினங்களாக வயநாடு, இடுக்கி, மலப்புரா மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிவன் கோவிலே மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முல்லை பெரியாற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருகியுள்ளது.
இதன்காரணமாக நீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகள், ஆறுகள் உள்ளிட்டவைகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் பல்வேறு பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
[su_image_carousel source=”media: 16538,16537″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]
மூணாறு மாவட்டத்தில் பணியாற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் கட்டுக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகள் ராஜமலை பகுதியில் உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையால் மின்சாரம், சாலை என அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டிருந்தது.
தனியார் எஸ்டேட் அமைந்திருக்கும் நேமக்கடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தோட்டத் தொழிலாளர்களின் 4 பெரிய குடியிருப்புகள் புதைந்ததால் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 80 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
[su_image_carousel source=”media: 16539,16540″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]
மேலும் தொடர்மழையால் பெரியவாரை பகுதியில் பகுதியில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதால் மீட்புப்பணியினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சேற்றில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இடுக்கி, வயநாடு, மலப்புரா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகர் கொரோனவால் மரணம்…