ஒன்றிய அரசை 7 ஆண்டாக நடத்தி வரும் மோடி மீது ரஃபேல் ஊழல் #RafaleScam,
வெளிப்படைத் தன்மையற்ற மர்ம நிதியான பிஎம் கேர்ஸ் ஊழல் #pmcaresscam,
கொரோனா தடுப்பூசி #vaccine வாங்கியதில் செய்யப்பட்ட செட்டிங்ஸ்,
பிஎம் கேர்ஸ் நிதியில் ரூ.4000 கோடியில் வெண்டிலேட்டர் மோசடி,
என பல லட்ச கோடிகளை ஏப்பம் விட்ட ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுகள் பல இருந்தாலும் அவை அவைகளில் சில கூட ஏன் நீதிமன்றங்களால் விசாரிக்க படுவதில்லை,
குட்டி கதை எல்லாம் இல்லை நிஜக் கதையே.. நீதி நியாயம் நேர்மை தர்மம் போற்றும் இந்த இந்திய புண்ணிய பூமியில் நிரம்ப உண்டு உரைத்திடுகிறேன் கேளுங்கள்..
நீதிபதியாக இருக்கும் காலத்தில் மோடியை இந்த நபர் “பல்துறை மேதை” என்று அழைத்தார். இதன் பொருள் என்ன என்பது இந்த நபர்க்கு மட்டுமே தெரியும் என்பதால் எந்த பத்திரிகையும் மற்றும் மீடியோக்களும் அவரிடம் இதுகுறித்து வாய் திறந்து கேள்விகளைக் கேட்கவில்லை.
பெஞ்சின் ஒரு பகுதியாக அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விசாரித்த இந்த நபர் அன்றைய தலைமை நீதிபதி குற்றமற்றவர் என தீர்ப்பளித்தார். இதில் முக்கிய விஷயம் என்றால் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதியே தனக்கான நீதிபதியை நியமித்த விசித்திர வரலாறுகள் எல்லாம் கொண்டது மட்டுமல்ல.
அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகிய சில வாரங்களே ஆன நிலையில், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து அழகு பார்த்ததும் ஒன்றிய மோடி அரசின் மயிர்க்கூச்செறியும் அறிய சாதனை.
குஜராத் மதக் கலவரத்தில் அன்றைய முதலமைச்சர் மோடியின் பங்கை வெளிக்கொணர்ந்த அதீத நேர்மையாளர் மற்றும் இன்னமும் சிறையில் வாடும் சஞ்சீவ் பட் IPS காவல் உயர்அதிகாரிக்கு எந்த சட்ட சலுகையும் கிடைக்காமல் தீர்ப்பை இந்த நபர் எழுதியுள்ளார்.
நீதிபதி பி.எச். லோயா வழக்கை சிஜேஐ தீபக் மிஸ்ராவுக்கு மாற்றுவதற்கு முன்பு, எப்படி இந்த நபர் விசாரிக்கும் அதிகாரத்துக்கு வைக்கப்பட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டாக அன்றைய 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெருவுக்கு வந்து பேட்டி கொடுத்த அதிசயமும் நடந்தது மாண்புமிகு மோடி அரசு ஏழாண்டு ஆட்சிக் காலத்தில்தான்.
இந்த நபரின் இப்படிப்பட்ட வியக்கத்தகு நடுநிலையை விழுந்து பாராட்டிய ஒன்றிய அரசு, மேலும் அரசியல் ரீதியாக சமூக நீதியின் முக்கியமான ஆளுமையாக விளங்கிய முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத்க்கு எதிரான வழக்குகளை இந்த நபரின் தலைமையிலான பெஞ்சிற்கு நியமித்தது.
சிபிஐக்கு ஒன்றிய அரசு குழப்பம் விளைவித்த நாகேஸ்வர் ராவ் இடைக்கால சிபிஐ தலைவராக நியமித்ததை எதிர்த்து சவால் விடுத்த அன்றைய பொறுப்பு சிபிஐ இயக்குனர் தொடுத்த வழக்கை இந்த நபர் பெஞ்ச் நிராகரித்தது.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி மற்றும் சைபுதீன் சோஸ் ஆகியோருக்காக தாக்கல் செய்யப்பட்ட ஹேபியாஸ் கார்பஸ் மனுக்களை விசாரித்த இந்த நபர் முன்னாள் வழக்கை தாமதப்படுத்தினார் மற்றும் பிந்தையதை தள்ளுபடி செய்தார்.
பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளை வெளியேற்றுவதற்காக 21 மாநிலங்களுக்கு இந்த நபர் இருந்த பெஞ்ச் உத்தரவுகளை பிறப்பித்தது, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் கூற்றுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுருங்க சொல்ல வேண்டும் என்றால் மலைவாழ் காட்டுவாழ் மண்ணின் மைந்தர்களை உங்கள் சொந்த மண்ணை விட்டு “உடனே வெளிய போங்கடா” என சொல்லும் உன்னத தீர்ப்பு இது.
அது மட்டுமா #VVPAT எப்படி விரைவாக எண்ண வேண்டும் என்ற ஆதாரத்தையும் தந்த நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி மட்டும் செய்யவில்லை, அப்படி வழக்கு தொடுத்த நிறுவனத்தை நான்சென்ஸ் என்று திட்டி தீர்த்தார்..(Ref1)
விரைவாக VVPAT tally evm using optical scan process எண்ணிவிட்டால் 2019 தேர்தலில் நடந்ததுபோல evmswapping எல்லாம் இனிமேல் பண்ண முடியாது தானே.. இது எப்படி சென்சில் வரும். நான்சென்ஸ் தானே.
2024 தேர்தலை பற்றியும், முக்கியமாக அதில் யார் ஜெயிக்க வேண்டும் என்ற கவலையும் இந்த நபருக்கு இருக்காதா..
இந்த நபர் தான் ஓய்வு பெற்ற பின்னும் மிக அதிகமாக அதிகாரமிக்க அநேகமாக நாட்டில் மனித உரிமைகள் #NHRC குறித்து இனி முடிவு செய்வார். அவைகள் அரசாங்கத்தின் உரிமைகள் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி தானே.
இப்படி பல திறமைகளை ஒருங்கே பெற்ற இந்த நபரை எதிர்த்து நாடெங்கும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்ல நீதித்துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டு நீண்ட கடிதம் (Ref 2) எழுதியுள்ளார்கள்.
பல்துறை வித்தகர் மோடி என விளித்த அந்த இந்த நபர் எவர் என அறியும் ஆசை இருக்கிறதா
யாரிடம் சொல்லாதீர்கள் காதில் ரகசியம் சொல்கிறேன் இந்த நபர் பெயர் தான் முன்னாள் மாண்புமிகு நீதியரசர் அருண் மிஸ்ரா.
ஆளும் கட்சி குனிய சொல்லும் முன்னே கும்பிட்டு படுத்துவிட்டால் என்னென்ன பயன் கிடைக்கும் என சக நீதிபதிகளுக்கு மட்டுமல்லாமல், உலகத்திற்கு உணர்த்திய இந்த உன்னதமான நீதிபதியை நாமும் மனம் திறந்து வாழ்த்தலாமே.
நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி
Ref 3: https://thewire.in/law/justice-arun-mishra-judgments-analysis
பாடத்திட்டத்தில் யோகி ஆதித்யநாத், ராம்தேவின் புத்தகங்கள் சேர்ப்பு- கொந்தளிக்கும் மாணவர்கள்