பணமதிப்பு நீக்கம் செய்து இன்றுடன் 2 ஆண்டு நிறைவடைந்துள்ளது.

கருப்புப்பணத்தை மீட்கும் நோக்கில், பழைய ₹500, ₹1,000 நோட்டு செல்லாது என பிரதமர் மோடி 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இது நாடு  முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

மதிப்பு நீக்கம் செய்ய ரூபாயை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. அப்போது வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட்ள் கண்காணிக்கப்பட்டு,  சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருமான வரி சோதனைகள், போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த அதிரடிகள்  தொடர்ந்தன.

இந்நிலையில், செல்லாத நோட்டு டெபாசிட்டுக்கு பிறகு அவற்றை எண்ணும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. இதில், புழக்கத்தில் உள்ள 99.3 சதவீத நோட்டு,  அதாவது, 15 லட்சத்து 31 ஆயிரத்து 73 கோடி திரும்ப வந்து விட்டது. 10,720 கோடி ரூபாய் மட்டுமே வரவில்லை என தெரிவித்தது.

இதையடுத்து, இந்த திட்டம் தோல்வி அடைந்ததையே இது காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. காங்கிரஸ் கட்சி பணமதிப்பு நீக்கம் காரணமாக 35 லட்சம் பேர் வேலை இழந்ததாகவும் , நாட்டின் பொருளதாரம் 1.5% GDP சாய்ந்து 56 லட்சம் கோடி வீணடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளது

இந்நிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற  அமைப்பு, பணமதிப்பு நீக்கம் தொடர்பாக சமீபத்தில் . நாடு  முழுவதும் 15,000க்கும் மேற்பட்டோரிடம் 215 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.இதில்

  • 60 சதவீதம் பேர்  கருப்பு பண புழக்கம் 2 ஆண்டில் மீண்டும் அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
  • 7 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை
  • 16 சதவீதம் பேர் கருப்பு பண புழக்கம் அதே நிலையில்தான் உள்ளது எனவும்,
  • 17 சதவீதம் பேர் புழக்கம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதுபோல், பணமதிப்பு நீக்கம் முன்பு போலவே பில் எந்த மாற்றமும் இல்லமால்  இல்லாமல் பொருள் வாங்கியதாகவும், சொத்துக்களை பகுதி அளவு ரொக்கமாக கொடுத்து வாங்கியதாவதும் கூறியதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.