மத்திய பாஜக அரசு விளம்பரத்திற்காக 2019-2020 ஆண்டில் செலவு செய்த தொகை ரூ.713 கோடி என தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் (Bureau of Outreach and Communication (BOR) தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜதின் தேசாய் என்பவர் 2019-2020ம் ஆண்டில் மத்திய பாஜக அரசு விளம்பரத்திற்காக செலவிட்ட தொகை குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய அரசு நடப்பாண்டில் விளம்பரத்திற்காக ரூ.713.20 கோடி செலவிட்டுள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.95 கோடி செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
295.05 கோடி ரூபாய் அச்சு ஊடக விளம்பரங்களுக்கும், 317.05 கோடி ரூபாய் மின்னணு ஊடக விளம்பரங்களுக்கும், 101.10 கோடி ரூபாய் போஸ்டர், பேனர் உள்ளிட்ட திறந்தவெளி விளம்பரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் எந்த தகவலும் இல்லை என்று ஜதின் தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை, விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க விளம்பரங்கள் அவசியம்தான். ஆனால் மக்கள் நலனைக் கைவிட்டு, சமூக வலைதளங்களில் விளம்பர செலவு, பயணச் செலவு என இப்படி மக்களின் வரிப்பணத்தில் ஆண்டுதோறும் பலநூறு கோடியை வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் செலவிடுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 5,200 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோடிதான் எங்கள் ராவணன்; தீயிட்டு கொளுத்தி தசரா கொண்டாடிய விவசாயிகள்