சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹூலுவாடி ஜி ரமேஷ் 2-ஆவது நீதிபதியாக உள்ளார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நிர்வாகம் மேலும் சிறப்பாக நடைபெற ஹூலுவாடி ஜி ரமேஷை அங்கு பணிமாற்றம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
ஹூலுவாடி ஜி ரமேஷ் தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழக்கில் அர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் மற்றும் அர்பிஐ டைரக்டர் குருமுர்த்தி ஆசைப்படி செயல்பட்ட அதிமுக அரசின் செயலை நீதிமன்றத்தில் முறியிட்ட திமுக வழக்கில் அதிரடியாக நள்ளிரவில் வழக்கை எடுத்து மறு நாள் காலை 11 மணிக்குள் அதிரடியாக திமுக தலைவர் கருணாநிதி உடலை அண்ணா சமாதியில் தகனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடதக்கது .