பொள்ளாச்சி பயங்கரம் விவகாரத்தில் மாணவர்கள் கோபத்துடன் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
 
பொள்ளாச்சி 250க்கு மேற்ப்பட்ட பெண்கள் அதிமுக ஆட்சியில் 7 வருடமாக ,1100க்கும் மேற்ப்பட்ட கூட்டு பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்டும் எந்த நடவடடிக்கை எடுக்காத அதிமுக அரசின்  பயங்கரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
 
குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.
 
இதற்கிடையே இவ்விவகாரத்தில் கோபம் அடைந்த மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
திருச்சி மற்றும் கோவை, நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

கூட்டத்தில் மாணவர்கள் எழுப்பிவரும் கேள்வியால் ஆளும் தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன

இதேபோன்று பிற பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசினர் கலை கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு பாடமாக அமையும் வகையில் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.