தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. நடிகர் சிம்பு மற்றும் ஓவியா ஆகியோரை இணைத்து பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று கூட வதந்தி பரவியது. அதெல்லாம் பொய் என இருவருமே விளக்கம் தெரிவித்தனர்.

இதனிடையே நடிகை ஓவியா, ‘காஞ்சனா 3, களவாணி 2, 90 எம்.எல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகி வரும் “90 எம்.எல்” படத்திற்கு சிம்பு இசையமைக்கும் நிலையில், அந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்றை படக்குழு புத்தாண்டு விருந்தாக வெளியிடுகிறது.

விஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்பு, ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து இப்படத்திற்கு தன்னுடைய முழு திறமையையும் காட்டி இசையமைத்து வருகிறார். இவர் இசையமைக்கும் வீடியோவை, ’90 எம்எல்’ படத்தின் இயக்குனரான அனிதா உதுப், ட்விட்டரில் பகிர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, இப்படத்தின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட உள்ளது. அதில் “பீர் பிரியாணி” என்ற பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டது.