ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எசிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு மற்றும் இசட்+ பாதுகாப்பு ஆகியவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் திரும்பப் பெறப்பட்டது.
எஸ்பிஜி பாதுகாப்புக்கு கீழ் பிரியங்கா காந்தி இருந்த நிலையில் அவருக்கு டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு எண் 35 சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 1997 பிப்ரவரியில் இந்த வீடு சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. இதில் பிரியங்கா காந்தி தற்போது வசித்து வருகிறார்.
தற்போது இந்த வீட்டில் இருந்து பிரியங்கா காந்தி வெளியேற வேண்டும் என்று பாஜக மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும். அதோடு பிரியங்கா காந்தி 3.46 லட்சம் ரூபாயை இதற்காக மத்திய அரசிடம் செலுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பிரியங்கா காந்தி அந்த வீட்டில் தங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரியங்கா காந்திக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், “உங்களுக்கு இசட் + பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் மத்திய அரசின் கீழ் வரும் அரசு பங்களாக்களில் தங்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று விளக்கமளித்துள்ளது.
மேலும் வாசிக்க: நீதிபதியை மிரட்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி
எஸ்பிஜி, இசட் + பாதுகாப்பு என்பது இந்தியாவில் கொடுக்கப்படும் உயரிய பாதுகாப்பு. எஸ்பிஜி சட்ட பிரிவு 1988ல் கடந்த வருடம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, பிரதமர் மோடியை தவிர வேறு யாருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு கிடையாது என்று மாற்றப்பட்டது. இதனால் 28 வருடங்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம். மத்திய அரசின் ஊரடங்கு குளறுபடிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்டவற்றில் மத்திய அரசை பிரியங்கா காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பதால், இதற்கு எஸ்பிஜி, இசட் + பாதுகாப்பு நீக்கப்பட்டு வருடம் கடந்து, தற்போது பாஜக மோடி அரசு இந்த பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.