அக்டோபர் 4ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறும். தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மானவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் கடந்த 100 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச்.31 அன்று நடைபெறவிருந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை.

இந்நிலையில் இன்று (ஜூலை.01) UPSC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து Union Public Service Examination என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்றும் UPSC அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 7- 13, 2020 (06.00 PM) மற்றும் ஜூலை 20- 24, 2020 (06.00 PM) என இரண்டு கட்டங்களாக மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு எழுதும் மையத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[embeddoc url=”https://splco.me/tam/wp-content/uploads/2020/07/Civil-service-Preliminary-Examination-Important-notice.pdf”]