பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரின் கைது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை எற்ப்படுத்தி உள்ளது . இந்திய அளவில் லட்சகணக்கான பேர்கள் சமூகவலைதளத்திலே விவாதித்து அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர் ..பெண்களை கேவலபடுத்தி பேசிய தலைமை செயலளார் கிரிஜாவின் கொளுந்தனரும் முன்னால் சிரிப்பு நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய முடியாமல் ., படிக்கும் இளம் மாணவியை இரவோடு இரவாக கைது செய்ய காரணம் என்ன என்றவாறு கேள்விகளை எழுப்பினர் .
இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பொது இடத்தில் இவ்வாறு பேச கூடாது என்று அறிவுரை கூறி நீதிபதி அவருக்கு ஜானின் வழங்கினார்.
ஆனால் அவரையும் அவர் குடும்பத்தையும் மிரட்டியதாக அவரின் தந்தை அளித்த புகார் மீது நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி கைதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு, போராட்டம் அரம்பித்து வழக்கை வாபஸ் வாங்கவில்லையென்றால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என மாணவர்கள் அமைப்பு எச்சரித்து உள்ளது
மேலும் படிக்க : பாஜக தலைவரை போலிசார் கட்டுப்படுத்த முயன்றும் அவர் அமைதி அடையாமல் அவரும் அவர் பாஜக கட்சி பிரமுகர்களும் போட்ட கூச்சலால் சகபயணிகள் முகம் சுழித்தனர்