தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு நாளை ஆலோசனை செய்யவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

ஊரடங்கால் தினந்தோறும் உழைத்து வருமானம் ஈட்டும் லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலை இழந்து வறுமையில் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகஅரசு குடும்பஅட்டைதாரர்களுக்கு தலா 1000ரூ மற்றும் ஒருமாத ரேசன் பொருட்கள் இலவசமாக அறிவித்தது. இருப்பினும் மாதக்கணக்காக ஊரடங்கு உள்ள நிலையில் இந்த ஊக்கத்தொகை போதுமானதாக இல்லையென்று பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் தரமற்ற ரேசன் பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெளிச்சந்தையை விட குறைவான விலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு பை திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு. மளிகைக்கடைகளில் வாங்குவதை விட குறைந்த விலையில் 19 பொருட்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பு பையின் விலை ரூ.500.

மேற்கண்ட இந்த 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர் பயனடைவார்கள் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக அந்த பொருட்கள் வீடு தேடி வரவழைக்கும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது.

இதன்படி சென்னையில் 20 குடும்பங்களுக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் 044-24791133 / 9025653376 / 7305050541 / 7305050542 / 7305050543 / 7305050544 என்ற எண்களை மதியம் 1 மணிக்குள் தொடர்பு கொண்டு காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தனிநபர்கள் தங்களுக்கு காய்கறிகள் வேண்டும் என்றால் Swiggy, Zomato மற்றும் Dunzo ஆகிவிற்றின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற இணையதளம் வழியாகவும் காய்கறிகளை ஆர்டர் செய்யலாம். இதுதவிர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான காம்போ பேக்கை ரூ.850க்கு வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும் மேற்கூறிய அனைத்து திட்டங்களும் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை. Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற செயலிகள் மூலமும் காய்கறிகள் ஆர்டர் செய்யமுடிவவில்லை என மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர். தமிழகஅரசு இதுபோன்ற சேவைகளை உடனடியாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த மக்களின் சார்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.