தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகனாகநான கதிர் நடிப்பில் வெளியான மத யானை கூட்டம், பரியேறும் பெருமாள், கிருமி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் அட்லி இயக்கும் ‘விஜய்63’ படத்தில் கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நடிகர் கதிர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்நிலையில் குமரன் இயக்கும் புதிய படத்தில் கதிர் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு “ஜடா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில் கால்பந்து ஒன்றுடன் நடிகர் கதிர் அமர்ந்திருப்பது போல் போஸ்டர் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் விளையாட்டு சம்பந்தமான கதைக்களம் என்று தெரிகிறது. இந்தப் படத்திற்கு சாம் இசையமைக்கிறார். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார். ஜடா ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.