சாத்தான்குளம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் உடலில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்றும் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நீதிபதி பாரதிதாசன் விசாரணை அறிக்கையில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்: ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடிய அடித்திருக்கிறார்கள்.

லத்திகளை ஒப்படைக்குமாறு கேட்டபோது காவலர்கள் மறுக்க, தொடர்ந்து வற்புறுத்தி வாங்க வேண்டியிருந்தது.

ரத்தக் கறை படிந்த லத்தியை ஒப்படைக்க மறுத்து ஒரு காவலர் எகிறி குதித்து தப்பி ஓடினார்.

ஏடிஎஸ்பி குமார் மிரட்டும் தொனியிலான உடல்மொழியுடன் எதிரில் நின்றபடி இருந்தார்.

சூழல் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் முதலில் பெண் காவலர் சாட்சியமளிக்க மறுத்தார்.

சாட்சியளித்த தலைமைப் பெண் காவலர் ரேவதி மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

காவலர் மகாராஜன் என்னை ஒருமையில் அழைத்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை தரக்குறைவான வார்த்தைகளில் சொன்னார்.

காவலர் மகாராஜனை தள்ளி அழைத்துச் செல்ல
வேண்டியிருந்தது.

போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

[su_image_carousel source=”media: 15391,15390,15389,15388″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=US1crFmn_Rk” width=”700″ autoplay=”yes” title=”சாத்தான்குளம் போலீஸ் காவலில் பென்னிக்ஸ்- ஜெயராஜ் இரட்டைக் கொலை”]