ஆதாரம் இருப்பதாக கூறி தனது மேற்பார்வையில் விசாரனையை உச்ச நீதிமன்றம் தொடங்கி விட்டதே..
நீதிமன்றத்தில் முதல் அடி கிட்டதிட்ட செருப்படி மாதிரி தான் அதுவும் மோடி அரசரின் முகத்தில் என்று யாராவது சொன்னாலும் அதில் தவறு இருப்பதாக கூறிட முடியாது.

#PegasusSnoopgate எனும் பெகசஸ் ஊழல் சர்வதேச அளவில் பல நாடுகளில் பல தலைவர்களை பதம் பார்த்து வருகிறது

பழைய நீதிபதிகள் மாதிரி அல்ல ரமணா.. அவர் தலைமை நீதிபதி ஆகும் முன்னே காஸ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசுக்கு எதிராக நிறுத்தி வைக்கப்ட்ட இண்டெர்நெட் 4ஜி சேவையை திருப்பி தரும் படி ஏன் உத்தரவிட கூடாது என அவர் தலைமையில் ஆன மூவர் அடங்கிய பெஞ்ச் கேக்க..

ஒரு வருடமாக வழக்கை இழுத்தடித்து வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக மாவட்டத்துக்கு ஒரு இடம் என பதிலை ஒன்றிய அரசு 11-08-2020 தந்தது.. அவரின் வளர்ச்சியை தடுக்க பாஜக மோடி அரசு பல விதமாக தடுக்க நிறைத்தும் அவர்களின் கெட்ட நேரம் அவர் தலைமை நீதிபதியாக தற்போது ..

குமாரசாமி மாதிரி நீதிபதிகளை கண்ணுறும் நாம் தான் நேர்மையின் சிகரமான குன்ஹா மாதிரியும் பார்த்து வருகிறோம்.. நீதியின் செடி மீது சிலர் ஆசிட் வீசினாலும், தென்றலாய் சாரலாய் சிலர் அந்த செடியை அவ்வப்போது மலரவும் வைக்கிறனர்.

துள்ளி திரியும் மான் குட்டிகளை காணும் போது.. சீருடையில் காலையில் செல்லும் மழலைகளை காணும்போது.. அதிகாரத்தின் தவறை தட்டி கேள்வி கேக்கும் நீதியரசர்களை பார்க்கும் போது நம்மைப் போன்றவர்களின் மனமும் மகிழ்வுற தவறுவதே இல்லை..

ஆந்திர முதல்வர் தன் மீது ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரமணா மீது அவர்கள் மகள்கள் வாங்கிய சில நில குற்றசாட்டுகளை வைக்க அது பெறும் சர்ச்சை ஆனது..

இதன் பிண்ணனியில் #பாஜக இருந்ததாக பலரும் குற்றம் சாட்டினர். காரணம் நவம்பர் 2020 இல், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை ஒன்றிய அரசின் மூலம் அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கேட்டுக் கொண்ட போதும்..

ஒன்றிய அரசின் சார்ப்பாக இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அதனை மறுத்துவிட்டார்.
இப்படியான மறுப்பு ஒரு முறை அல்ல இரு முறை நிகழ்ந்தது.

பின்னர் 24 மார்ச் 2021 அன்று, உச்ச நீதிமன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, புகார்களை விசாரிப்பதற்கான உள் நடைமுறையின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா மீதான குற்றச்சாட்டுகள் “தகுதியற்றவை” எனக் கண்டறியப்பட்டு விசாரணையை முடித்துவிட்டன.

இதன் பின்னர் 24 ஏப்ரல் 2021 அன்று ரமணா இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இதன் மூலம் ஆந்திர முதல்வர் மூலம் நீதிபதி ரமணாவை தலைமை நீதிபதி யாக தடுக்கும் மோடி அரசரின் கனவும் கலைந்து விட்டதாக உச்ச நீதிமன்ற சுவர்கள் இன்றுவரையும் பேசுகின்றன..

ரமணா ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில். .
27 ஆகஸ்ட் 1957 அன்று திராவிட இனத்தின் தமிழ்மொழி வழிவந்த தெலுங்கு பேசும் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

இன்றும் மிக எளிமையானவர் அவர்.. பத்திரிகை துறையில் மிக சாதாரண வாழ்கையை தொடங்கினார் அவர்.. இன்று இந்திய மூத்த பத்திரிகயாளர்களில் நேர்மையானவர்கள் என பேர் எடுத்த என். ராம் உள்ளிட்டவர்கள் வீட்டு படுக்கையறை வரை படம் பிடிக்கும் வல்லமை பெற்ற பெகசஸ் வேவு பார்க்கு ஊழலை கண்டதும் பதறி போய் நீதிமன்ற கதவுகளை தட்டிய போது..

முதல் முதலாக மோடி மீதும் ஒன்றிய அரசை நடத்தும் உலகத்திலே பலம் மிக்க பாஜக மீதும் ..
உங்கள் விசாரனையில் நம்பிக்கை இல்லை.. நாங்களே விசாரிக்கிறோம் என தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி அடங்கிய மூவர் பென்ச் ஒரே குரலில் உறுதியாக சொல்லி விட்டது..

சினிமா ஹீரோக்களை அல்லவே.. மாறாக இப்படி பட்ட நீதியரசர்களை பற்றி நாமும் நம் குழந்தைகளுக்கும் சொல்லி.. நாளைய தலைவர்களை அறத்தின் பால் நிற்க சொல்லி வளர்ப்போம்.. ரமணாக்கள் வருக .. நீதிதுறைக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகளை இடரின்றி தொடர்ந்து செய்க..