ஒருங்கிணைந்த மலை அரையர் பழங்குடி சமூக அமைப்பு, சபரிமலையும் அய்யப்பனும் எங்களுடையது, மண்டல பூஜையும், 18 படிகள் கதையும் வரலாற்றின் பின் வந்தது என்றும், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து அய்யப்பனை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக அறிவித்துள்ளது.

மலை அரையர்கள் தங்கள் வழிபாட்டில், ஆண்-பெண் என்ற எந்தப் பாகுபாட்டையும் பார்ப்பதில்லை என்றும், பார்ப்பனர் அல்லாதோரின் வழிபாட்டு உரிமையைப் போலவே பெண்கள் கோவில் நுழைவும் முக்கியமானது என்றும் அறிவித்துள்ளது. 1902ல் தந்திரிகள் குடும்பம், எங்களிடமிருந்து அய்யப்பனையும் சபரிமலை, கரிமலை ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டதாகவும், சொல்கிறது மலையரையர்கள் கூட்டமைப்பு.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உரிமை கொண்டாடும் ஆதிவாசிகள் குடும்பமான கருமலை அரையன் வாரிசு என கூறும் ஸஜீவ் கூறும் பொழுது:

நாங்கள் இன்னும் சபரிமலையை சுற்றியுள்ள மலையில் தான் வசிக்கிறோம், எங்களது உறுவினர்கள் பலர் இடம் பெயர்ந்து விட்டனர்…
பல தலைமுறைகளுக்கு முன் எங்கள் முப்பாட்டன் பிரதிஷ்டை செய்து வணங்கிய தெய்வம் தான்சபரிமலை என்றும் .,

அதில சபரிமலையின் முதல் பூசாரி கருமலை அரயன் என்றும்.,
இரண்டாவது பூசாரி தாளனாடி அரயன் என்றும்.,
மூன்றாவது பூசாரி கோர்மன் அரயன் என்றும்., கூறினார்.

மேலும் 1902 வருடத்திற்கு பிறகு தான் தாளமன் தந்திரி குடும்பம் (தற்போதைய தந்திரி குடும்பம்) எங்களது ஆதிவாசி மக்களை வலுகட்டாயமாக அடித்து விரட்டி கோயிலை கையகப்படுத்தி பூஜை செய்ய துவங்கியதோடு, எங்களை (மலைவாழ் மக்களை) சபரிமலையில் இருந்து அன்னியப்படுத்தினர் என்றும் குற்றம் சுமத்தி உள்ளார்.

இன்றும் நாங்கள் முடிவெட்டாமல், தாடி வளர்த்து 41 நாட்கள் விரதம் இருந்தே ஐயனை தரிசிக்க மலை ஏறுகிறோம். ஆனால் பலர் எந்த விரதமும் இருக்காமல் முகம் சவரம் செய்தே பொய்யாக சன்னிதானம் வருகிறார்கள், அவர்கள் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்றும்

மேலும் 18 படிகளில் முதல் படியை மறித்து தலை கீழாக போட்டுள்ளனர். அதை நேராக எடுத்து வைத்து பார்த்தால் அதில் 1) கருமலை அரயன், 2) தாளனாடி அரையன், 3) கோர்மன் அரையன் என கோயிலை நிர்வகித்தவர்கள் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் , இவர்கள் எல்லாம் எனது மூப்பாட்டன்கள் என்றும் …. இதை தொல்பொருள் ஆராய்ச்சி துறை மூலம் ஆராய்ந்தால் பல உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்

மேலும் நிலக்கல் மகாதேவர் ஆலயம் அருகில் ரப்பர் தோட்டம் ஒன்றில் இரண்டு சித்திரம் பொறிக்கப்பட்ட கற்சிலை உள்ளது என்னோடு வந்தால் காட்டி தருகிறேன். சபரிமலை யாருடையது என்ற வரலாற்றை அது குறிப்பிடுகிறது என்றும்.,

அதை போல் ஆறான்முள பகுதியில் சமீபத்திய பேய் மழையில் மண் அரிப்பால் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு வெளியே வந்துள்ளது. அதை பார்த்து படித்த பல பேர் சபரிமலையின் பூர்விகத்தை தெரிந்து ஆச்சர்யம் அடைந்தனர் என்றும்.,

மேலும் நாங்கள் (ஆதிவாசி குடும்பத்தினர்) சபரிமலையை சுற்றி 28 கிலோ மீட்டர் வரை சஞ்சரித்து பல தடயங்களை கண்டுபிடித்துள்ளோம். எங்களோடு வந்தால் அதை காண்பிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கொதகுத்தி மலை என்ற மலையில் 18 படிகளை பாறையில் செதுக்கி சபரிமலை கோயில் மற்றும் அதை குறித்த குறிப்புகளை விட்டு சென்றுள்ளனர் எங்கள் முன்னோர்கள் என்றும் கூறிய அவர்…

நான் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஐயப்பனை எங்களுக்கு (ஆதிவாசி மக்களுக்கு) மீட்டு தர உதவுமாறு உங்களை கேட்டு கொள்கிறேன், அதற்கான ஆதாரங்களை நாங்கள் கொடுக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்..

அவர் பேசிய பதிவை காண இங்கே சொடுக்கவும் ..