பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் இன்று (ஜூன்.30) மாலை 4 மணியளவிவ் உரையாற்றினார். மோடி உரையின் முக்கிய அம்சங்கள்:

சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழுமுடக்கத்தால் இந்திய மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால், பொதுமுடக்க தளர்வின்போது பொது இடங்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

பொதுமுடக்க விதிமுறை மீறல்களுக்காக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் மூலம் இதனை நன்கு அறிய முடிகிறது. நம் நாட்டில் பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் ஒரே சட்டம் தான். இதனை குடிமக்கள் கருத்தில் கொண்டு, பொதுமுடக்க விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தற்போதைய மழை காலத்தில் சளி, காய்ச்சல் வரும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். உலகின் பிற நாடுகளை ஒப்பிடும்போது, இ்ந்கியாவில் கொரோனா நிலவரம் கட்டுக்குள்தான் உள்ளது.

பொதுமுடக்கத்தின் காரணமாக ஏழைகள் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே மூன்று மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மேலும் 5 மாதங்களுக்கு (நவம்பர் மாதம் வரை) இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

மேலும் வாசிக்க: மருத்துவ வசதி இல்லாத உத்திரபிரதேசம்; பச்சிளம் குழந்தை பலி

குடும்ப அட்டைதாரர்கள் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ கடலை பருப்பு என்ற கணக்கில் இலவச ரேஷன் பொருள்கள் அளிக்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இதன் மூலம் நாட்டின் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.

ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் இதுவரை மொத்தம் 31 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஏழை, எளிய மக்களுக்காக மொத்தம் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதி்ப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் அவர்களின் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.