பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பிடதி நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராகவில்லை. ஆர்த்திராவ் உள்ளிட்டோர் தந்த பலாத்கார வழக்கு பிடதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஜுனில் நித்தியானந்தா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் நித்யானந்தா ஒருமுறைகூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் கடுப்படைந்த நீதிபதி ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நித்தியானந்தா அன்றும் ஆஜராகாமால் இருந்தால் பிடிவாரண்ட் போடப்படும் என எச்சரித்தார்
நித்தியானந்தா கடந்த ஆறு மாதமாக எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. பாலியல் பலாத்கார வழக்குக்கு பயந்து நித்தியானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கலாம் என்ற தகவலும் கர்நாடகத்தில் பரவுகிறது.
இதேபோல் நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா தீவு ஒன்றுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. .
நித்தியானந்தா தலைமறைவாக இருந்தாலும் தினமும் யூ-டியூப் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆன்மீக பிரச்சாரத்தை எங்கிருந்து நித்தி செய்து வருகிறார் என்ற மர்மம் நீடிக்கிறது.
நித்தியின் தலைமறைவு பற்றி கர்நாடக மாநில சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். நித்தியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் விமானம் மூலம் எங்கும் செல்ல இயலாது. ஆகையால் அவர் சாலை மார்க்கமாக தான் சென்று இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 3 அன்று அவர் நீதிமன்றம் வராவிட்டால் அவரை கைது செய்யும் பிடிவாரண்ட் பிறபிக்கப்படும் என்று நீதிபதி சொல்லியது குறிப்பிதக்கது