தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் அரசியல் தலைவா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தோ்தலும், அதனுடன் சோ்த்து காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் நடத்தப்பட உள்ளது.

கடந்த 10ம் தேதி தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள், சுவரொட்டிகள், அரசு விளம்பரங்களில் இடம் பெற்றிருக்கும் பிரதமரின் புகைப்படம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமங் குமாா் இயக்கத்தில், இந்தி நடிகா் விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை தோ்தல் நேரத்தில் வெளியிட பலரும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா்.

ஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தோ்தல் தொடங்கும் நிலையில் அடுத்த தினமே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சிகள் தரப்பிலும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.