நடிகர் விஷால், நடிகை அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் ஈட்டியது. மறுபுறம் நடிகர், நடிகைகளின் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமானதாக கடந்த வாரம் ஆர்யா, சயீஷாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துவிட்டது.

அதே போல், விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.

இந்நிலையில், விஷால், அனிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகரும், இயக்குனருமான மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.