பணமதிப்பு இழப்பு நடவடடிக்கையால் கறுப்பு பணம் ஒழிந்து விட்டது என பாஜகவினர் மார் தட்டி கூறி வரும் நிலையில் இந்தியாவில் அதிக பட்சமாக குஜராத்தில் பணம் மற்றும் பரிசுபொருடகள் ரூ.509 கோடிகள் கைபற்றியதாக வந்த தகவலால் (ஏப்ரல் 2ஆம் தேதி நிலவரப்படி) பாஜக தலைமை அதிர்ந்து உள்ளதாம்
 
இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் அதிமுக அரசில் இது வரை தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் (ஏப்ரல் 11ஆம் தேதி நிலவரப்படி) ரூ.49 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழித்த பாஜக அரசை கிண்டல் செய்து சமூகவலை தளத்திலே வைரலாகி வரும் படம் ..

 
இதே போல் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி சோதனையில் இதுவரை ரூ.128.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் 280 கோடி மதிப்பிலான 970 கிலோ தங்கம் மற்றும் 600 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.
 
ரூ.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ.7.77 கோ மதிப்பிலான பரிசு பொருட்கள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள சேலை மற்றும் வேஷ்டிகளை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்தார்.
 
தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பாக 4,282 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
முன்னதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் டிஜிபி அசுதோஷ் சுக்லா சந்திப்பு மேற்கொண்டார்.
 
இதன் பின்னர் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சாகுவுடன் சுக்லா ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
தேர்தல் பணிகளுக்கான டிஜிபி ஆக பணி நியமனம் செய்யப்பட்ட சுக்லா இரண்டாவது முறையாக சாகுவுடன் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிட தக்கது