ராகுல் காந்தி உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய  உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி புதன்கிழமையன்று அமேதி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். பேட்டியின் போது அவர் தலையில் பச்சை நிற ஒளிப்புள்ளியொன்று இரண்டு தடைவைகள் படுவதை அங்கிருந்தவர்கள் கண்டனர்.
 
 
பின்னர் காங்கிரஸ் கட்சியானது இத்தகைய ஒளிப்புள்ளி என்பது லேசர் வசதி கொண்ட துப்பாக்கியில் பயன்படுத்தப்படுவது என்றும், எனவே ராகுல் காந்தி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் தெரிவித்தது. அத்துடன் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதாகவும் புகார் கூறியது.
 
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது.
 
ஆனால் இதை   ராகுல் காந்தி உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய  உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய  உள்துறை அமைச்சகம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவருக்கு எஸ்.பி.ஜி என்னும் உயர் மட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. காங்கிரசின் புகார் கடிதம் கிடைக்கப்பட்டதும், உடனடியாக எஸ்.பி.ஜியிடம் தொடபு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர்கள் ராகுலின் தலையில் விழுந்த பச்சை நிற ஒளிப்புள்ளி என்பது காங்கிரஸ் ஊடக  குழுவினரில் ஒருவர் பயன்படுத்திய கேமராவில் இருந்து வந்தது என்று தெரிவித்துள்ளனர். எப்போதும் ராகுலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் இதை கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பக்கத்தில் இருந்த கேமரா என்றால் தொடர்ந்து இருக்க வேண்டுமே எப்படி விட்டு விட்டு வருகிறது என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர் ..
 
ராகுலில் தந்தை ராஜிவ் காந்தியும் அவர் பாட்டி இந்திரகாந்தியும் தேசத்துக்காக தங்கள் உயிரை இழந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது