உலகளவில் பரவலாக பயன்படுத்தக் கூடிய க்ளைபோசேட் பூச்சிக்கொல்லியால் புற்றுநோய் ஏற்படுவதால் அதனை தடை செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.
மான்சாண்டோ என்ற ரசாயண தயாரிப்பு நிறுவனத்தின் “கிளைபோசேட்” பூச்சுக்கொல்லி பாதுகாப்புத்தன்மை அற்றது எனவும், அதனால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு மான்சாண்டோ நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ‘கிளைபோசேட்’ பூச்சுக்கொல்லிக்கு தடை விதித்தது.
இந்தியாவின் பெரும்பாலான விவாசாய நிலங்களில் இந்த ‘கிளைபோசேட்’ பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகக் கூறி ஆந்திர அரசும் இந்த பூச்சுக் கொல்லியை தடை செய்துவிட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி இத்தகைய கொடிய பூச்சுக்கொல்லியை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கிளைபோசேட் பூச்சுக்கொல்லிக்கு தடை விதித்து ஆந்திர அரசு வெளியிட்ட அரசாணையின் நகலையும் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவராகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.