தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அமர்வுக்கு அதிகாரம் இல்லை: தலைமை நீதிபதியிடம் எச்.ராஜா தரப்பில் முறையீடு
சென்னை:

தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். காவல்துறை குறித்து அவதூறாக பேசியது, சட்டவிரோதமாக கூடுதல், அமைதிக்கான ஆணையை மீறுதல், தடை உத்தரவை மீறுதல், இரு தரப்பினர் இடையே மோதலை தூண்டுதல், அநாகரீகமாக நடந்துகொள்ளுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தது.

இவற்றில் சில பிரிவுகள் ஜாமினில் வெளிவர முடியாதவை. மேலும் ஹெச்.ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட 2 தனிப்படையினர் ஹெச்.ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை ஹுலுவாடி ரமேஷ் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு அமர்வு நீதிமன்றத்தை இழிவாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரிக்க 4 வாரத்திற்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானியிடம் முறையிட்டார்.

தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், எச்.ராஜாவை ஆஜராக உத்தரவிடுவதற்கு நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவும் எச் ராஜா தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். எச்.ராஜா தரப்பு கோரிக்கையை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தகில் ரமானி, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் இதுபற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி செல்வம் அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வார் என அவரின் ஆதரவாளர்கள் மகிழ்வுடன் கூறினார்கள் ..

மேலும் நடைபெறும் எங்கள் ஆட்சியில் எங்கள் தேசிய கட்சியின் எச் ராஜா பொது செயலாளரை யார் தான் கைது செய்ய முடியும் என்றும் பெருமை பொங்க கூறி அவரின் ஆதரவாளர்கள் சென்றனர்

இது குறித்து உயர்நீதிமன்ற சீனியர்வழக்கறினர் சந்தானகிருஷ்ணன் அவர்களிடம் நமது நிருபர் வினவிய போது சட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தாமாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என்றும் இதற்கு பல முன்மாதிரிகள் உள்ளன எனவும் கூறிப்பிட்டார் .