தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 3) 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 58 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,608 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 52,070 ஆக உள்ளது. இந்நிலையில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,86,173 ஆக உயர்ந்துள்ளது. இது 86.61% சதவிகிதமாகும்.
தமிழகத்தில் மொத்தம் 154 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 90 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 82,901 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,69,135 பேரும், பெண்கள் 1,76,687 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இதில் 12 வயதிற்குள் 20,322 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,67,416 பேரும், 60 வயதிற்கு மேல் 58,113 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனாவை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகள் பேரழிவுக்கு வழிவகுக்கும்: WHO எச்சரிக்கை