தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (ஜனவரி 01) மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று காரணமாக கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் குமாரி கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி