தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தாக்கம் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூலை 3) கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று (ஜூலை 3) ஒரே நாளில் புதிதாக 4, 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.
இன்று, சென்னையில் மட்டும் 2,082 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 64,689 அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 4,343 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 3,423 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 64 பேர் பலியானதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் காரணமாக இதுவரை மொத்தம் 58,378 பேர் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
[su_youtube url=”https://youtu.be/hU7G1zFb9VM” width=”700″ autoplay=”yes”]
மேலும் வாசிக்க: விஷவாயு தாக்கி 4 பேர் பலி; சட்டத்தை மீறி கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதா..