பத்ம சேஷாத்திரி பள்ளியில் யுகேஜி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் லஞ்சம் மோசடி செய்தாக கூறி ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளி (PSBB) ஆசிரியர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அப்பள்ளி தொடர்பான மேலும் ஒரு புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளியில் யுகேஜி படிக்க சீட் வாங்கி தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மதுவந்தி மீது புகார் எழுந்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகனுக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் யுகேஜி சேர்ப்பதற்காக சீட் கேட்டு, அந்தப் பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியை அணுகியிருக்கிறார்.

அதற்காக 5 லட்ச ரூபாய் பணத்தை மதுவந்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனுக்கு பள்ளியில் இடம் கொடுப்பதாக கூறி அலை கழித்ததாகவும், இறுதியில் சீட்டு வாங்கி கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என மதுவதந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து மதுவந்தி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனையடுத்து கே.கே.நகர் காவல்துறையினர் புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி; ஷாருக்கான் மகன் உள்பட பாலிவுட் பிரபலங்கள் கைது!