தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.  மேலும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து இருப்பு உள்ளதாக கூறினார்.
 
நேற்று முன்தினம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறிய விவரம் பிவருமாறு  “தமிழகம் முழுவதும் 1700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு 3800 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்து விட்டனர் என  தெரிவித்துள்ளார்.
 
காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள ராதாகிருஷ்ணன் நோய் அறிகுறி தெரிந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பரவும் டெங்கு பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தாமால் அதிமுக வினர் அமைச்சர்கள் மேற்பார்வையில்  விஜய் படத்தின் பானரை கிழித்து கொண்டு   பொறுப்பில்லாமால் இருப்பத்தாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
முன்னதாக சென்ற வாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.

திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்குறிப்பிட்ட இடங்களின் தரைப்பகுதி, இருக்கைகள், சமையலறை, குளியலறை, கழிவறைகள் கை கழுவும் இடம் மற்றும் கை கழுவும் பகுதியில் உள்ள குழாய்கள் போன்ற இடங்களில் லைசால் அல்லது ஹைப்போ குளோரைடு திரவம் அல்லது சர்ஜிகல் ஸ்பிரிட் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.

மேலும், தங்கள் நிறுவனத்திற்குட்பட்ட பகுதிகளில் முதிர் கொசுக்களை அழித்திடும் வகையில் புகைப்பரப்பும் இயந்திரங்களை சொந்தமாக கொள்முதல் செய்து அவற்றின் மூலம் வாரம் ஒருமுறை புகை மருந்து அடித்தல் வேண்டும்.

திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திட வேண்டும். நிகழ்ச்சி அல்லது வளாகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் குறித்த விளம்பர பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்.

குறிப்பாக திரையரங்குகளில் விளம்பர காட்சி நேரத்தின் போது பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பான படக்காட்சிகள் தவறாமல் ஒளிபரப்பு செய்திட வேண்டும்.

திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைபிடித்து பருவமழை காலங்களில் பொதுமக்களை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்திட தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.