முதல் அமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனுதாரர் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதில் மூன்று மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது.

ஆயிர கோடிக்கணக்கில் முறைகேடு செய்ய டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்த முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்பதாக திமுக கட்சி தலைவர்.

தான் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தி பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக முதலமைச்சரின் மீது 13.06.2018 அன்றே லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது என்றும் .,

ஆனால் அந்த புகாரினை முறையாக விசாரிக்காமல் – என் சம்பந்தி அரசு கான்டிராக்ட் எடுக்கக்கூடாதா? என்றெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆணவத்துடன் வாதிட்டார் என்றும்.,

மேலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை வைத்தே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புகார் மீதான முதற்கட்ட விசாரணையை நடத்த வைத்து, “டெண்டர் விட்டத்தில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை” என்று உயர்நீதிமன்றத்திற்கே அறிக்கை கொடுக்க வைத்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறையையே கேலிக்கூத்தாக்கினார என்றும் .,

தனக்குத்தானே நீதிபதியாகிக் கொண்ட முதலமைச்சரைப் பார்த்து நாடே வெட்கப்பட்டது. இவ்வளவும் போதாது என்று அரசு தலைமை வழக்கறிஞரையும் அவ்வாறே வாதாட வைத்து முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை குறைத்து விட்டார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து மேலும் அகில இந்திய அளவில் #resignEPS ஹாஷ்டாக் டிரண்ட் ஆகி அதிமுக வுக்கு பெரும் தலைவலியை அது உண்டாகியது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் பொன்னையன் தெரிவித்துள்ளனர். உண்மையின் அடிப்படையில் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தெரிவித்த பொன்னையன், முதல்வர் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மேல்முறையிடு மனு தள்ளுபடி செய்யும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பிரச்சனையாக இது உருவெடுத்து ஜெயலலிதா வழியில் பழனிசாமியும் சிறை செல்ல நேரிடும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்