‘ஒத்த செருப்பு சைஸ் 7’ சாதனையைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாக்யராஜ், தன் சிஷ்யர்களைப் பார்த்து தான் வெட்கப்படுவதாக கூறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் தனது அடுத்த முயற்சியாக தான் ஒருவர் மட்டுமே நடித்து, எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே முழுப்படத்திலும் வரும்படி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகும் முன்பே Asia book of record, India book of records-ல் தனிநபர் திரைப்பட முயற்சியில் தேர்வு பெற்று ஒரு உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கான பத்திரிக்கை சந்திப்பு நேற்று நடைபெற்றது. Asia book of record, India book of records சார்பாக விவேக் கலந்துகொண்டு இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் சமுத்திரகனி, சாமி, முன்னிலயில் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் இயக்குனர் பார்த்திபனை பாராட்டி பேசிய பாக்கியராஜ், “பார்த்திபன்னு சொன்னாலே வித்தியாசமா சிந்திக்க கூடியவர்னு எல்லோருக்கும் தெரியும். இப்படத்தை பொறுத்த வரைக்கும் அவரது தைரியத்தை பாராட்டுவாத, இல்லை துணிச்சலை பாராட்டுவதானு தெரியவில்லை.
எனக்கு ஒரு விதத்தில் வெட்கமா இருக்கு. பார்த்திபன் நிறைய விருதுகள் வாங்கி விட்டார். இன்னொரு சிஷ்யன் பாண்டியராஜனும் வெளிநாடு போய் விருதுகள் வாங்கி விட்டார். ஆனால் நான் குரு எனச் சொல்லிக் கொண்டு இதுவரை எதுவும் வாங்கவில்லை.
ஆனால் இப்படத்தில் பார்த்திபன் நடித்தது தான் சரி ஏனென்றால் படம் செய்ய அது இல்லை, இது இல்லை எனக் குறை சொல்லும் நிலையில் இவர் தனியாளாக நின்று ஜெயித்திருக்க்கிறார். அதற்காக அவர் எத்தனை உழைத்திருப்பார் என்று உணர முடிந்தது. இன்னும் சாதனைகள் செய்ய பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் இதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.
இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, “சம்பிரதாயமாக படங்கள் பார்த்துவிட்டு இது அழகாக இருக்கிறது, அது அழகாக இருக்கிறது எனச் சொல்ல விருப்பமில்லை என அவரிடம் சொன்னேன். புதிய வார்ப்புகள் படத்தில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் திட்டியிருக்கிறேன். அவன் புதிய பாதை படத்தை எடுத்த போது நீயா நடிக்கிறாய் எனக் கேள்வி கேட்டேன்.
ஆனால் படம் வெளிவந்த போது பிரமித்து போனேன். அவன் காலப்பயணத்தில் முன் பயணிப்பவன். அவனுக்கான உயரம் வேறு, அவனுக்குரிய இடத்தை தமிழ் சினிமா அவனுக்கு தரவில்லை. இந்தப்படத்தை பார்த்து பாராட்ட வார்த்தைகளே இல்லை. நான் தனியாக கடிதம் எழுதுகிறேன் என்றேன். படத்தின் ஒவ்வொன்றும் அத்தனை துல்லியம் இப்படி படம் எடுக்க முடியுமா என பிரமித்துப் போனேன். உலகம் திரும்பி பார்க்கும் படைப்பை தந்திருக்கிறான் வாழ்த்துக்கள்” என்றார்.
உள்ளூரில்ர் வியாபாரத்தில் தோல்வி கண்ட ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியூரில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.