நீச்சலில் உலகளவில் பல சாதனைகள் புரிந்து பல பதக்கங்களைப் பெற்ற குற்றாலீஸ்வரன் தன் சமூக வலைத்தள பக்கத்தில்அஜித்தை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்படம் தற்போது வைராலாகி வருகிறது.

குற்றாலீஸ்வரன் இந்தியாவின் சார்பாக உலகளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். மேலும் இவர் கின்னஸ் சாதனை செய்தவர் இவர் இந்திய அரசின் அர்ஜுனா விருதை 1996 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

தற்போது நடிகர் அஜித்குமாரை சந்தித்தது பற்றி குற்றாலீஸ்வரன் தனது வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது, “தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை சந்திப்பு. அவர் என் ரசிகன் என்று சொன்னபோது, அந்த மனிதரின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்” என்று கூறி அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அஜித் தற்போதெல்லாம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொங்கலுக்கு ரிலீசான விஸ்வாசம் மற்றும் இம்மாதம் ரிலீசான நேர்கொண்ட பார்வை நல்ல வசூலை ஈட்டியது.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பூஜை வரும் 29ம் தேதி சென்னையில் நடை பெற உள்ளது. இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்ததுடன் க்ளீன் ஷேவ் செய்து தலைமுடிக்கு டை அடித்துள்ளார் அஜித். தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்..

நீண்ட காலத்திற்கு பிறகு அஜித்தை இப்படி பார்த்த அவரது ரசிகர்கள், அஜித்தை இப்படி மாற்றிய இயக்குனர் வினோத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கார் ரேஸ், துப்பக்கி சுடுதல், தானியங்கி விமானம் இயக்குதல் தொடர்ந்து, தற்பொது அஜித் குற்றாலீஸ்வரனை சந்தித்ததன் மூலம் விளையாட்ட்டு துறையிலும் ஈடுபட உள்ளார் என செய்திகள் பரவிவருகிறது.