கடந்த ஜனவரி மாதம் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு மேஜிக் நிபுணராக நடித்திருந்தார். இதற்கான காட்சிகள் ராமன் சர்மா என்கிற நிஜ மேஜிக் கலைஞர் மெர்சல் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றினார்.
இதற்காக அவரிடம் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க தேனாண்டாள் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால் படம் முடிந்து பல்வேறு சர்ச்சைகளை கடந்து நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இந்நிலையில், மேஜிக் நிபுணர் ராமன் சர்மா தயாரிப்பு நிறுவனம்மான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தை வழங்கவில்லை என்றும், ஊதியத்தை முறைப்படி வழங்ககாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக தொடர்ந்து சமூகவலைதளங்களில் புகாரை கிளப்பி வரும் ராமன் சர்மா, தற்போது சம்பள பாக்கி குறித்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிர்வாகி உடன் தொலைப்பேசியில் பேசும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் “நவம்பர் 26ம் தேதிக்குள் பணம் தந்துவிடுவதாக எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் தேதி டிசம்பர் 6 வந்துவிட்டது. இன்னும் எனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என ராமன் சர்மா பேசியுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி, இன்னும் ஓரிரு நாட்களி நிச்சயம் பணம் கிடைத்து விடும். சம்பள பாக்கி இருக்கும் அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டு விடும் என்று கூறுகிறார். நிறைவாக பேசும் ராமன் சர்மா ஓரிரு நாட்களில் பணம் வரவில்லை என்றால் வீடியோ போட்டுவிடுவேன்” எனக் குறிப்பிடுகிறார்.
இன்று தனது காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, வீடியோவை ராமன் சர்மா பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியுள்ள ராமன் சர்மா, அதில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளையும் டேக் செய்துள்ளார்.