திமுக முன்னெடுக்கும் AIFFSJ- All India Federation for Social Justice உதயமானால் அதிகமான பாதிப்பு யாருக்கு.. மதத்தின் பெயரால் கட்சி நடத்துபவர்களுக்கும், அரசியல் நடத்துபவர்களுக்கும் என்று எப்படி திடமாக உங்களால் சொல்ல முடியும் என கேட்பவர்களுக்கு..
சென்ற ஆண்டில் திமுக எடுத்த முன்னெடுப்பு காரணமாக OBC மருத்துவ மாணவர்கள் பெற்ற 2544 இடங்களே சாட்சி.. மோடி அரசின் ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டாக OBC மருத்துவ மாணவர்கள் 10000-க்கும் மேல் வாய்பினை இழந்த இடங்களே சாட்சி..
பட்டியல் இன மக்கள் தங்கள் ஒதுக்கீட்டை பெறுவதற்க்கு எந்த தடையும் இல்லை.. ஆனால் இந்தியா எங்கும் உள்ள 60% OBC-க்கு அந்த நிலை இல்லை.. சரியான பிரதினுத்துவம் அவர்களுக்கு தரபடவே இல்லை..
உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் தான் ஆட்சிக்கு வந்தால் சாதி ரிதியாக சென்செஸ் எடுக்கபடும் என சொல்லி இருப்பது அங்குள்ள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..
இதே சாதி வாரி கணக்கெடுப்பை இந்திய அளவில் எடுக்கும் போது இதுவரை வெளிபடாத உண்மை வெளிவரும்.. இதன் மூலம் AIFFSJ இனி மருத்துவத் துறை மட்டும் நிற்காது.. அது தனது சிறகை விரிக்கும் போது எல்லா ஒன்றிய அரசின் துறையிலும் 27% OBC உறுதியினை செய்யும்..
இதன் மூலம் ஹிந்து மாணவர்களை ஏமாற்றி 10% EWS upper caste quota மூலம் வயிற்றில் அடிக்கும் பாஜகவின் முகத்திரை கிழியும் போது உண்மையான ஹிந்துக்கள் பலன் பெறுவது இனி நடக்கும்..
இதனை காங்கிரஸ் செய்து இருக்க வேண்டும். ஆனால் இதை இப்போதாவது அகில இந்திய அளவில் திமுக முன்னெடுத்தது வரவேற்கதக்கது..
இதில் மஹாராஷ்டிராவில் உள்ள தேசிய காங்கிரஸ், பிகாரில் உள்ள லல்லு பிரசாத் கட்சி, மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், உத்திரப் பிரதேசத்தில் உள்ள அகிலேஷ் சமாஜ்வாதி கட்சி, கம்ரேட்கள் கட்சி உள்ளிட்ட பலரும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடப்பதால்..
இது சத்தியமாகும் பட்சத்தில் இந்த அணி சென்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கி என்பது பாஜக பெற்ற வாக்கு வங்கியை காட்டிலும் அதிகம் என்பதால்..
இந்த முயற்சி பாஜக கட்சிக்கு வயிற்றில் புளியை மட்டுமல்ல ஆச்சி மசாலா தயாரிக்கும் அனைத்து மசாலா பொருட்களையும் கலக்கும் என்பதால்.. இந்த முயற்ச்சியில் காங்கிரஸ் கட்சியும் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்..
இதை செயல்படுத்தும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அனைத்து இந்திய தலைவர்களுக்கும் எல்லா விதத்திலும் கைகொடுக்க..
இந்திய எங்கும் வியாபித்து இருக்கும் 60% OBC மாணவர்கள் சார்பில் நாமும் நமது மனபூர்வ ஆதரவை நல்குவது தானே சரியான நகர்வாக இருக்க கூடும் எம்பாவாய்…