1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். ரஜினியின் ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்படு கடைசியாக, நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
‘இந்தியன் 2’வில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவுக்கு, லைகா நிறுவனம் முன்பணமாக ஒரு பெருந்தொகையை வழங்கியுள்ளது. படத்தில் ‘நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். முத்தக் காட்சிகளில் நடிப்பது என்றால் அதை முன்கூட்டியே என்னிடம் தெரிவிக்க வேண்டும்’ போன்ற சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டுள்ளாராம் நயன்தாரா.
முன்னதாக, பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்த பிறகு ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஸ்ருதி ஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரமானந்தம், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் ‘இந்தியன் 2’ படம் துவங்கப்படும் என்று கூறப்பட்டது.
சுமார் 50 சதவீத படப்பிடிப்புடன் நின்றுபோன ‘சபாஷ் நாயுடு’ படத்தைப் பற்றி கமல் வாய் திறக்கவில்லை. அதுமட்டுமல்ல, கமல் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தலைவன் இருக்கின்றான், மர்மயோகி படங்கள் பற்றியும் புதிய தகவல் இல்லை.
இதற்கிடையே இந்தியன்-2 படத்தை தொடங்குவதற்கு முன்னதாக, பாதியில் நின்றுபோன ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஏறக்குறைய பல கோடி பணம் முடங்கிப் போயிருப்பதால், சபாஷ்நாயுடு படத்தை முடித்துக் கொடுத்தால் இந்தியன்- 2 படத்தை பைனான்ஸ் சிக்கல் இல்லாமல் தொடங்கலாம் என்ற எண்ணத்திலேயே ‘சபாஷ் நாயுடு’ படத்தை முடித்துக் கொடுக்கும்படி கமலிடம் கேட்டிருக்கிறதாம் லைகா.
ஆனால் பிக்பாஸ் படப்பிடிப்பு குறுக்கிடுவதால் சபாஷ் நாயுடு படத்தை தற்போது முடிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம் கமல். ஆனால் இந்தப்படங்களை கிடப்பில் போட்டுவிட்டு இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல் விரும்பியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,
கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு ‘இந்தியன் 2’ படம் தான் மிகச் சிறந்த அடித்தளமாக அமையும் எனவும், இப்படத்தின் கதைக் களமும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று எண்ணியே ‘இந்தியன் 2’ படத்துக்கு கமல் முன்னுரிமை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Trackbacks/Pingbacks