கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து இன்று நலம் விசாரித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
 
கடற்கரை யூனியன் பிரதேசமான கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. 63 வயதாகும் முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த நிலையில், இன்று கோவா பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவைக்கு முதல்வர் மனோகர் பாரிக்கர் வந்ததும், அவரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 10 நிமிடம் நடைபெற்றது.
 
சந்திப்புக்குப் பிறகு, பேரவை வாயிலில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்க ராகுல் மறுத்துவிட்டார்.
 
முன்னதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இடம் மோடி ரபேல் ஊழல் தொடர்பான ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வெளிட்ட ஆடியோவில் கூறிப்பிடபட்டு இருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ராகுலின் இச்செயல் பாஜகவில் மோடி தரப்பினர் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல்  நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ..