இறுதிக்கட்ட பிரசார நேரம் பெறுவதில் எழுந்த சிக்கலில், உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காத கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், ‘செந்தில் பாலாஜி ஆள்களை அனுப்பி, என்னையும், குடும்பத்தையும் அச்சுறுத்தினார்’ என்று இன்று மதியம் பேட்டி கொடுத்த சம்பவமே . இருகட்சிகளுக்கு இடையில் மோதலை எற்படுதியதா என்ற வாதத்தால்  கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தி.மு.க-வுக்கு கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இன்று 4 மணியிலிருந்து  6 மணி வரை நேரம் கொடுத்திருந்தார்.
 
அ.தி.மு.க-வுக்கோ, இன்று மதியம் ஒரு மணியில் இருந்து  3 மணி வரை நேரம் ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனைச் சந்தித்தார். அதன்பின்பு, பேட்டியளித்த அமைச்சர், “திடமிட்டபடி கரூர் வெங்கமேடு பகுதியிலிருந்து பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி வரை தம்பிதுரையின் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெறும். ஒரு மணியில் இருந்து  6 மணி வரை நடைபெறும்” என்று சொல்லியிருந்தார்.
 
அதைத் தொடர்ந்து, தி.மு.க-வினர் கலெக்டரை சந்தித்து முறையிடச் சென்றனர். அதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிரசாரம் செய்ய அனுமதி வழங்கும்படி தி.மு.க தரப்பில் அவசர வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
 
அ.தி.மு.க சார்பிலும், இன்று பிரசாரம் செய்ய அனுமதிக்கும்படியும் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் காளியப்பன் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
ஆனால், 12 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், “எனக்கு செந்தில் பாலாஜி தரப்பு கொலைமிரட்டல் விடுத்தது” என்று அதிரடி பேட்டி கொடுத்தார். அதற்குள், உயர் நீதிமன்றம் இன்று தி.மு.க-வை பிரசாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி உத்தரவிட்டது. 
 
உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட மகிழ்ச்சியில் , காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தரப்பும், கரூர் வெங்கமேடு பகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்க முயன்றது. அவருடன் நாஞ்சில் சம்பத், கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
 
ஆனால், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ‘இருவருக்கும் கரூர் பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை’ என்று உத்தரவிட்டதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்து, பாதுகாப்பை பலப்படுத்தினார்.
 
அதிரடிப் படை வீரர்களும் குவிக்கப்பட்டனர். கலவரத்தை அடக்கும் வஜ்ரா வாகனமும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வெண்ணைமலையில் இருந்து வெங்கமேடு வழியாக சர்ச் கார்னர் கடந்து பேருந்துநிலையத்தை அடைய, அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டது.
 
வெண்ணைமலையில் இருந்து தம்பிதுரை திறந்த வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கம்புடன் வந்தனர்.
 
அப்போது, அங்கே ஜோதிமணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் சரமாரியாக கற்களை ஜோதிமணி பிரசாரம் மேற்கொண்ட திறந்த வாகனத்தின்மீது வீசினர்.  
 
அப்போது தீடிர் என  பறந்துவந்த கற்கள், தம்மைத் தாக்க வருவதை உணர்ந்த ஜோதிமணியும், நாஞ்சில் சம்பத்தும் தலையைக் குனிந்துகொண்டனர்கள் . 

 

 

வெறியுடன் கிளம்பும் அதிமுக தம்பிதுரையின் அடியாட்கள்

அதிமுகவினர் கல் வீச்சு அதிகமாகவே , வெறியுடன் கம்புடன் இறங்க ஜோதிமணி, நாஞ்சில் சம்பத், கே.என்.நேரு ஆகியோர்களை  கார்களில் ஏறி சென்று விடுமாறு திமுக தொண்டர்கள் அறிவுரையை எற்று அவர்களும் சென்று விட்டனர்.
அதன்பிறகு, தி.மு.க-வினரை நோக்கி அ.தி.மு.க-வினர் சரமரியாக  கற்களை  எறிய அந்த பகுதியே போர்கோலம் போல ஆனது .
 
இதில் திமுக வினருக்கு 10-க்கும் மேற்பட்டவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும் ஜோதிமணி பிரசாரம் செய்யும் அந்த திறந்த ஜீப்பை அ.தி.மு.க-வினர் கம்புகளால் தாக்கினர். திமுகவினர் இதனை தடுத்த திருப்பி தாக்குதலில் முயன்ற நிலையில் .,
 
சுதாரித்த போலீஸார் தடியடி நடத்தி இரு கட்சியினரையும் அப்புறப்படுத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸார், வெங்கமேடு கடைவீதி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
தி.மு.க கூட்டணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரசார வாகனம் ஆகியவை தாக்கப்பட்ட சம்பவத்தால், கரூர் நகரப்பகுதியே பதற்றமாகக் காணப்படுகிறது.
 
உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து கரூர் கலெக்டர் நடந்து இருந்தால் இந்த கலவரம் தவிரக்கப்பட்டு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.. மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத மாவட்ட   கலெக்டர் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது ..