முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.
இந்த மகிழ்ச்சிக்கு நடுவே தற்போது, கீர்த்தி சுரேஷ் ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஆடை பிரிவு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விபின்தியாகி இன்று சென்னை விஆர் மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்தார்.
முன்னதாக கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் பேசியபோது, “பள்ளி நாட்களிலிருந்தே ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் பயன்படுத்தியுள்ளேன். இதில் தென்னிந்திய மண்டல தூதுவராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றி” எனக் கூறினார்.