திருவாரூர் மாவட்டம் நீலக்குடி என்ற பகுதியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பலைகள் தமிழ்நாட்டில் பரவலாக இருந்து வருகின்றன.
 
இந்நிலையில், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 30 மாணவ- மாணவியர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து ஒன்றுகூடி பேசி பல்கலைக்கழக வளாகத்தில் காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாகவும் தெரிகிறது.

கருத்து சுதந்திரத்துக்கு தடை போடும் பல்கலைகழக செயலுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கலாம் ..என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இதனைக் கேட்ட பேராசிரியர்களிடம் தகாத வார்த்தைகளால் மாணவ- மாணவிகள் பேசியதாகவும் கூறி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஒழுக்க நெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் விளக்கம் கேட்டு 30 மாணவ- மாணவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
மாணவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய விவகாரத்தில் சமூகவலைதளத்திலே தமிழ்நாடு பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்புகளை சமூக வலைதளத்திலே பதிவிட்டு பலரும் வருவதால் பரபரப்பு கூடியுள்ளது ..