மூன்று முறை தீவிரவாத காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஓர் சாதி சூழ் ஆர்எஸ்எஸ் தலைமை பீடமாக செயல்பட்டு வரும் அயோத்தியா மண்டபத்தைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியது சரியா..
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் மிக மையப் பகுதியில் அயோத்தியா மண்டபத்தை அமைந்துள்ளது ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பு.
ஹிந்துக்களாக என பாஜக கூறினாலும் இதன் வரலாறு பார்த்தால் இதன் மீது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் காதலை மற்றும் அடங்கா காமத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஸ்ரீ ராம் சமாஜ் ஒரு பதிவு செய்யப்பட்ட சொசைட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மூலம் அயோத்தியா மண்டபம் 1964 இல் கட்டப்பட்டது. இதன் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ஓர் சாதி சூழ் அவர்கள் மட்டும் தான் என்பது எழுதபடாத விதி.
இதில் மிக முக்கியமான விஷயம் ஆரம்பத்தில் இது மாம்பலம் ஐயர்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டது. பின்னர் அந்த பகுதி சார்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்க வேறு வழியில்லாமல் இது மற்ற அனைத்து சமூகங்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டது.
ஆனாலும் அங்குள்ள உள்ளூர்வாசிகள் சொல்வது என்னவென்றால், இது இன்றும் பிராமண சமூகத்திற்கான சங்கம்/ சந்திப்பு இடமாகவே இந்த மண்டபம் அறியப்படுகிறது.
இந்த மண்டபத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாகத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை 2014 ஆண்டிலே செல்வி.ஜெயலலிதா அதிமுக அரசின் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனாலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனுசுரனை காரணமாக அதிமுக அரசு கடந்த 8 வருடமாக இதை கையகப்படுத்த முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.
இதை இழுத்து அடிக்க அரசு 2014 ஆண்டில் போட்ட உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் சிலைகள் நிறுவுதல் மற்றும் பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், இந்த மண்டபம் பொதுக் கோயிலா இல்லையா என்பது தொடர்பாக ஸ்ரீ ராம் சமாஜத் தலைவர் ரிட் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இது கோயில் அல்ல என்றும், ஆகம சாஸ்திரப்படி பொதுமக்கள் வழிபடுவதற்காகச் சிலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், ராமர், சீதை, அனுமன் ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதாகவும் மனுதாரர் கூறினார்.
இருப்பினும், சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களிடமிருந்து காணிக்கை வசூலிக்கப்படுவதாலும் இது கோயில் என்றே அறநிலையத் துறை வாதிட்டது.
கடந்த மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் போட்ட வழக்கை தூசு தட்டி திமுக அரசு எடுத்த வழக்கில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வேலுமணி அவர்கள், அறநிலை துறையின் பக்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை முழுபதிவாக பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிடாத நிலையில், இதை பற்றி ஸ்பெல்கோ முழுமையான செய்தி தீர்ப்பு வந்தவுடன் மார்ச் மாதத்தில் வெளியிட்டது.
மேலும் இது தொடர்பாக முடிவு எடுக்க ரிட் மனு மூலம் விண்ணப்பிக்கக் கூடாது என்று நீதிபதி கூற, இது பெரும் பின்னடைவாக ஸ்ரீ ராம் சமாஜத்துக்கு அமைந்த நிலையில்.,
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியா கோயிலை அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் நேற்று அதன் சொத்து மதிப்பு மற்றும் கணக்குகளை பார்வையிட இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) அதிகாரிகள் வந்த நேரத்தில் பாஜக கட்சி அதன் பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாடடம் என செய்தி வெளியிட..
அவர் தலைமையில் அங்கு குழுமிய பிரமணர்கள் சங்க தலைவர் நாரயணன் உட்பட ஜெய்ஶ்ரீராம் என கோஷமிட்ட படியே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பணி செய்ய முடியாமல் அறநிலையத்துறையின் அலுவர்கள் படும் அவதியை கண்டு காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
கர்ப்பிணி மனைவியை காட்டுக்கு அனுப்பிய ஜெய் ஶ்ரீராம் கோஷம் போட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்த பாஜக பொது செயலாளர் மற்றும் ஒரே ஒரு கவுன்சிலர் உமாவையும் கைது செய்து, ஒரே பேருந்தில் போராடிய சுமார் 45 பேரையும் ஏற்றி சென்னை அசோக் நகர் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை சீர் செய்தனர்.
இன்று போராடிய நாற்பத்தி ஏழு பேர் மீது அரசுப்பணியாளர்கள் தங்கள் வேலைகளை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் சீர்கேடு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில் இன்று (12.4.2022) பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் வராமல் டிமிக்கி கொடுத்தற்கு அவர் மீது கடுப்பில் தாம்பிரஸ் பிரமண சங்க மேற்கு மாம்பல வாசிகள் இருப்பதாக லோக்கல் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ ராம் சமாஜ் பிரைவேட் சொசைட்டி விஷயத்தில் நம்மை போன்ற சாமனியர்கள் வைக்கும் கேள்விகள்..
🐝 உயர் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு எதிராக அமைத்த நிலையில், ஸ்ரீ ராம் சமாஜ் நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் எதற்கு பாஜக கட்சியை துணைக்கு கூப்பிட வேண்டும்.
🐝 சந்து பிள்ளையாருக்கு சந்தனம் சரியாக வைக்கவில்லை என்று டிவிட் போட்டாலே விரைந்து ஓடி வரும் திரு அண்ணாமலை அவர்கள், நீதிமன்ற உத்தரவு என்பதால் தானே ஒடி ஒளிந்து கொண்டார் என்பதை ஸ்ரீ ராம் சமாஜத்துக்கு யார் சொல்லி புரிய வைப்பது.
🐝 மேலும், அறநிலையத்துறையின் நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட மன்றத்தின் முறையீடு செய்ய அனுமதி இருக்கும் நிலையில் அந்த சட்ட பிரிவை ஸ்ரீ ராம் சமாஜ் பயன்படுத்த ஏன் பயப்பட வேண்டும்.
🐝 கணக்கு கேட்டால் கொடுக்க வேண்டியது தானே ஸ்ரீ ராம் சமாஜ்.
🐝 மாறாக ஏன் கணக்கை தெரிவிக்க பயந்து ஜெய்ஸ்ரீராம் என கத்தி கூப்பாடு ஏன் போட வேண்டும்.
🐝 இதனால் இனி மடியில் கணமா ஸ்ரீ ராம் சமாஜத்துக்கு என்று அந்த பகுதி இந்து மக்களும் பகிரங்கமாக கேப்பார்களே.
தன் ராஜ்யத்தில் தானே மகிழ்ச்சியடயாத காரணத்தினால் சரயூ நதியில் தற்கொலை செய்து கொண்ட ராமருக்காக அயோத்தியா மண்டபத்தை அமைந்துள்ள ஸ்ரீ ராம் சமாஜ் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளது..
சமூக வலைதளங்களில் காண: https://www.facebook.com/savenra/posts/8223727037653147