பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்திலுள்ள பார்ஹ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஒரு மத சடங்கின் போது கங்கை நதியில் குளியல் எடுத்துக்கொண்டிருந்த 45 வயதான பெண் இந்துத்துவவாதிகளால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று பார்ஹ் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் போலீஸ் தரப்பில் இதுபற்றி தெரிவிக்கையில், இசம்பவத்தில் ஈடுபட்டவர் மற்றும் அதனை வீடியோ எடுத்து சமூக வளைத்தலங்களில் பரப்பியவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் இசம்பவம் குறித்து தகவல் அறிந்து விசாரணை நடைபெறுவதற்குள், இதன் வீடியோ சமூக வளைத்தலங்கள் மூலம் வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.
கங்கை நதியில் புனித குளியல் செய்துகொண்டிருந்த பெண், டிரைவரானா சிவபூஜன் மஹ்தோ என்பவரால் நீரிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு, பின்னர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று பார்ஹ் போலீஸ் தெரிவித்தனர்.
இதுபற்றி, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 45 வயதான பெண் அப்பகுதி போலீஸாரிடம் புகார் அளித்த போது, முதல் தகவல் அறிக்கை போட போலீஸ் மறுத்ததாக கூறினர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வளைத்தலங்களில் பரவிய பின்னரே, இதுகுறித்து குற்ற போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், குற்ற போலீஸ் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னர், தலைமை போலீஸ் கண்காணிப்பாளர் மனு மஹாராஜ் கூறுகையில், பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ பதிவு செய்த மஹ்தோ மற்றும் விஷால் உட்பட குற்றம் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மஹ்தோ குற்றவாளியின் பிடியில் இருந்து மைனர் பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக தலைமை போலீஸ் கண்காணிப்பாளர் மஹாராஜ் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரத்திற்குள், பீகார் மாநிலம் பாட்னாவில் ஃபல்வரிஷரிஃப் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளி வளாகத்திலே ஒன்பது மாதமாக ஐந்தாம் வகுப்பு மானவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி தலைமை பொறுப்பாளர் மற்றும் எழுத்தர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பீகார் மாநிலமானது தேர்தலுக்கு பின்னர், முதல்வாராக மதசர்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தகுதியில் பிஜேபி சேர்ந்த சுசில் மோடி கூட்டணியால் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.