முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் இன்று காலமானார்.அவர் வாழ்வில் நடத்த ஒரு முக்கிய நிகழ்வு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மத்தியில் ஆட்சியை பறிகொடுத்தது ஆகும் .இதன் விவரத்தை விரிவாக இதோ உங்களுக்கு தருகிறது ஸ்பெல்கொ செய்தி தளம்

வாஜ்பாயி அரசுக்கு பிப்ரவரி 1998ல் அஇஅதிமுக வின் ஆதரவு கடிதத்தை குடியரசு தலைவர் கே.ஆர். நாராணனிடம் கொடுத்தார் ஜெயலலிதா.அந்த அமைச்சரவையில் அஇஅதிமுகவும் அங்கம் வகித்தது. தம்பிதுரை, குமார் போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

இதை தொடர்ந்து 1999ம் ஆண்டு 13 மாதங்கள் வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி நடத்தி வந்த நிலையில், மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது காரணம் அப்போது 13 மாதத்திலே ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கி கொண்டார் . இதற்கு முக்கிய காரணம் அதிமுக ஆதரவுடன் காங்கிரஸ் துணை கொண்டு சுப்பரமணிய ஸ்வாமி வாஜ்பாயி அரசை கலைத்து ஜெயலலிதாவை துணை பிரதமர் ஆக்குகிறேன் என்று ஆசையை ஊட்டியது தான் .

இத்தனைக்கும் இதே சுப்பரமணிய ஸ்வாமி 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை அரம்பித்து வைத்தவர் என்பதும் குறிப்பிடதக்கது . ஆனால் இந்த உண்மையை மறைத்து ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கபட்டவுடன் எதோ தன்னால் தான் எல்லாம் முடிந்தது போல் இன்றும் கதை சொல்வார் .

இப்படி புது பதவி ஆசை ஜெயலலிதாவுக்கு வந்த காரணமாக 1999ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் பாஜக கூட்டணி 269 வாக்குகளைப் பெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் 270 வாக்குகளைப் பெற்றது. வாக்கெடுப்பின் நிறைவில் முடிவை அறிவித்த அவைத் தலைவர் ஜி.எம்.சி. பாலயோகி, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாஜ்பாயி தோற்கடிக்கப்பட்டார் என்று அறிவித்தார்.

இதன் மூலம் வாஜ்பாய் அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. அப்போது மக்களவையில் 6 எம் பி க்களை கொண்டிருந்த திமுக ஆதரித்தும் ஆட்சியை இழந்தார் வாஜ்பாய். இதனால் 1999 செப்டம்பரில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி மலர்ந்தது.

இன்றும் அரசியல் நோக்கர்கள் ஜெயலலிதா 1999 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்க்காமல் இருத்து இருந்தால் திமுக பாஜக கூட்டணி நிகழ்ந்து இருக்காது என்று கூறுகின்றனர் ..

இதை பற்றி வாஜ்பாயி எப்படி சொன்னார் தெரியுமா ” இந்த 14 மாதங்கள் என் அரசியல் வாழ்வின் மிக முக்கியமான மாதங்கள். இந்த 14 மாதங்களில் நான் அனுபவித்த துன்பங்களை, 1975 – 1977 காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தின்போது என்னை சிறையில் அடைத்த போது கூட நான் அனுபவத்தது இல்லை. காலையில் தூங்கி எழும்போது இன்று இரவு நான் பிரதமராக படுக்க செல்லுவேனா அல்லது அரசு கவிழ்ந்து பதவி இழந்து படுக்க செல்லுவேனா என்று எனக்குத் தெரியாது” என்று செப்டம்பர், 1999 ல் சென்னையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாஜ்பாய் குறிப்பிட்டார்.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மத்தியில் ஆட்சியை பறிகொடுத்த வாஜ்பாய் மீண்டும் தேர்தலில் நின்று NDA 37.06 % வாக்குகளை வென்று 270 சீட்டை கைப்பற்றி வாஜ்பாயி பிரதமர் ஆகி தனது முழு ஆட்சி காலத்தை 1999 ~ 2004 தொடர்ந்த வரலாறை இந்தியா கண்டது . இந்த கால கட்டத்தில் தான் திமுக ஐ.டி துறையில் முழு கவனம் செலுத்தி தரமணி ஐ.டி பார்க் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டத்தை அறிமுகபடுத்தியது