ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு தடை என தெரிவித்துள்ளது.
இந்த தடையை தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 06) பிற்பகல் 3 மணியில் இருந்து தமிழகத்தில் ட்ரீம் 11 செயலி செயல்படவில்லை. வங்கி கணக்கு வைத்திருப்போரும், தமிழகத்தில் வசிப்போரும் இனி ட்ரீம் 11 செயலியை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
NLC தேர்வில் தேர்ச்சிபெற்ற 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள்.. திமுக கடும் கண்டனம்